மாகாணங்களுக்கு இடையில் பயணங்களை மேற்கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளவர்கள், சுகாதார வழிகாட்டல்களை உரியவாறு பின்பற்ற வேண்டும் – பொலிசார் வலியுறுத்து!
Monday, July 5th, 2021மாகாணங்களுக்கு இடையில் பயணங்களை மேற்கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளவர்கள், சுகாதார வழிகாட்டல்களை உரியவாறு பின்பற்ற வேண்டும் என பொலிஸார் அறிவுறுத்தியுள்ளனர்.
மாகாணங்களுக்கு இடையிலான பயணக் கட்டுபாடுகள், எதிர்வரும் 19 ஆம் திகதிவரை நீடிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், பொலிஸ் ஊடகப் பேச்சாளர், சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன, குறித்த அறிவுறுத்தலை விடுத்துள்ளார்.
மேல் மாகாணத்திற்குள் உள்நுழையும் மற்றும் மேல்மாகாணத்தில் இருந்து வெளியேறும் 14 இடங்களில், வீதித் தடைகள் மூலம் சோதனைகள் முன்னெடுக்கப்படுகின்றன. அத்துடன், ஏனைய மாகாணங்களிலும், வீதித் தடை சோதனைகள் இடம்பெறுகின்றன.
இந்நிலையில், மாகாண பயணத்தடையை மீறி, சட்டவிரோதமாக செயற்படுபவர்களுக்கு எதிராக கடுமையான சட்டநடவடிக்கை எடுக்கப்படும் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
இலவசக் காலணிகளைப் பெற மாணவர்களுக்கு வவுச்சர்!
பகிடிவதை சட்டம் - மனித உரிமைகள் சட்டம் என்ற தலைப்பில் கருத்தரங்கு!
தொல்பொருளை சேதப்படுத்துவோருக்கு எதிராக சட்ட நடவடிக்கை - அமைச்சர், விதுர விக்ரமநாயக்க அறிவிப்பு!
|
|