மாகாணங்களுக்கு இடையிலான பயணத்தடையை அலட்சியம் செய்தால் கைதுசெய்யப்படுவர் – சிரேஷ்ட பிரதிக் பொலிஸ் மா அதிபர் எச்சரிக்கை!

Monday, August 16th, 2021

மாகாணங்களுக்கு இடையிலான பயணத்தடையை மீறி பயணிப்பவர்களைக் கைதுசெய்ய நடவடிக்கை எடுக்கப்படுவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரும், சிரேஷ்ட பிரதிக் பொலிஸ் மா அதிபருமான அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.

அத்துடன், அவர்கள் பயணிக்கும் வாகனங்களையும் கையகப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மாகாண எல்லைகள் வரையில், பேருந்துகளில் பயணித்து, பின்னர் அங்கிருந்து நடைபாதையாக சென்று, வேறு பேருந்துகளின் மூலம் சில இடங்களில் சிலர் பயணிப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

இவ்வாறான நடவடிக்கைகள் இடம்பெற்றால், குறித்த பேருந்தின் உரிமையாளர், சாரதி, நடத்துநர் உட்பட சம்பந்தப்பட்டவர்களுடன், குறித்த பேருந்தையும் பொலிஸாரின் பொறுப்பில் எடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: