மாகாணங்களுக்கு இடையிலான பொதுப்போக்குவரத்து முழுமையாக இடைநிறுத்தம்!

Friday, August 13th, 2021

நாடளாவிய ரீதியிலான முடக்கத்தை அமுல்படுத்தாதிருக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக இராணுவத் தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

அத்துடன் இன்று நள்ளிரவுமுதல் மாகாணங்களுக்கு இடையிலான பொதுப்போக்குவரத்து முழுமையாக இடைநிறுத்தப்படும் எனவும் இராணுவத் தளபதி அறிவித்துள்ளார்.

இதேநேரம் எதிர்வரும் செப்டெம்பர் 15 ஆம் திகதிக்கு பின்னர் பொது இடங்களுக்கு வருகைத்தருபவர்கள் தடுப்பூசி அட்டையை வைத்திருப்பது அவசியமாகுமெனவும் இராணுவத்தளபதி குறிப்பிட்டார்.

அதேவேளை இன்று நள்ளிரவுமுதல் அமுலாகும் வகையில் நாடளாவிய ரீதியில் மாகாணங்களுக்கிடையிலான பயணக்கட்டுப்பாடுகள் கடுமையாக அமுல்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத்தளபதி சவேந்திர சில்வா தெரிவித்தார்.

ஜனாதிபதி மற்றும் கொரோனா ஒழிப்பு செயலணியுடன் இன்றையதினம் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே இந்த தீர்மானம் எட்டப்பட்டுள்ளதாக இராணுவத்தளபதி மேலும் தெரிவித்துள்ளார்.

அத்துடன் நாடளாவிய ரீதியில் அத்தியாவசிய தேவைகளை தவிர்ந்த ஏனைய எந்தவொரு போக்குவரத்துக்களும் இடம்பெறாது எனவும் இராணுவத்தளபதி குறிப்பிட்டார்.

மேலும், சுகாதாரம், சுற்றுலா, விவசாயம், ஆடைத் தொழிற்சாலைகள், மற்றும் துறைமுகங்களில் சேவையாற்றுபவர்களுக்கு மாகாணங்களுக்கிடையில் பயணிக்க முடியும்.

அது மாத்திரமின்றி அத்தியாவசிய தேவைகள் நிமித்தம் பயணிப்பவர்களுக்கும் மாகாணங்களுக்கிடையில் பயணிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக இராணுவத்தளபதி குறிப்பிட்டார்.

இதேவேளை, எதிர்வரும் செப்டெம்பர் 15ஆம் திகதிக்கு பின்னர் பொது இடங்களுக்கு வருகைத்தருபவர்கள் தடுப்பூசி அட்டையைவைத்திருப்பது அவசியமாகுமெனவும் இராணுவத்தளபதி தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

தற்போது அமுலில் உள்ள சுகாதார வழிகாட்டல்கள், மேலும் இறுக்கமாக நடைமுறைப்படுத்தப்படும் எனவும் இராணுவத் தளபதி தெரிவித்துள்ளார்.

இதேவேளை

நாட்பட்ட நோய்களால் பாதிக்கப்பட்ட 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் கொவிட் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனரா என்பதை அறிய பிசிஆர் சோதனைகளைத் துரிதப்படுத்துமாறு சுகாதார அமைச்சுக்கு ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ச அறிவுறுத்தியுள்ளார்.

கொரோனா தொற்றால் இறக்கும் பெரும்பாலான மக்கள் 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் என்பதால் இந்நடவடிக்கைகள் அவர்களை மரணத்தின் பிடியிலிருந்து பாதுகாக்கும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அதனடிப்படையில் நீரிழிவு, இதய நோய் மற்றும் சிறுநீரக நோய் போன்ற தொற்றல்லா நோய்களால் பாதிக்கப்பட்ட 60 வயதிலும் கூடியோருக்கு பிசிஆர் சோதனைகள் செய்யப் படவுள்ளன.

ஜனாதிபதிக்கும் சுகாதார அதிகாரிகளுக்கும் இடையில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போது இந்த அறிவுறுத்தல்கள் ஜனாதிபதியால் வழங்கப்பட்டன.

இத்திட்டத்தை செயற்படுத்தவென உள்ளூர் சுகாதார அதிகாரிகளுக்கு அமைச்சு சுற்றறிக்கை வெளியிடவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts:

தற்கொலை குண்டு தாக்குதலின் கோரமுகத்தை புனித அந்தோனியார் ஆலயத்தில் காணமுடிந்தது - இந்தியப் பிரதமர்!
சவால்களை வெற்றிகொண்டு மக்கள் எதிர்பார்ப்புக்களை அடைந்துகொள்வதற்காக நேர்மறையான மனப்பாங்குடன் செயற்பட ...
பணியை புறக்கணிக்காத சுகாதார சேவையாளர்களை கௌரவிக்க நடவடிக்கை - பாராட்டு நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்படவ...