மாகாணங்களுக்கு இடையிலான போக்குவரத்து சேவைகள் இன்றுமுதல் ஆரம்பம் !

நாட்டில் நடமாட்டக் கட்டுப்பாடுகள் மேலும் தளர்த்தப்பட்ட நிலையில், அத்தியாவசிய தேவைகள் மற்றும் சேவைகளுக்காக மாத்திரம் மட்டுப்படுத்தப்பட்ட வகையில் மாகாணங்களுக்கு இடையிலான போக்குவரத்து சேவைகள் இன்று மீளவும் ஆரம்பமாகியுள்ளன.
இதனடிப்படையில் 14 தூரப் பயண தொடருந்துகள் மாகாணங்கள் கடந்த சேவைக்காக இயங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும் அத்தியாவசிய தேவைகளுக்காக மாத்திரமே இந்த தொடருந்து சேவைகளைப் பயன்படுத்த முடியும்.
அதேவேளை, மாகாணங்களுக்கு இடையில் அத்தியாவசிய சேவைகளுக்காக 500 பேருந்துகள் இன்றுமுதல் சேவையை முன்னெடுத்துள்ளதாக இலங்கை போக்குவரத்து சபை அறிவித்துள்ளது.
அதேபோன்று தனியார் பேருந்துகளும் இன்றுமுதல் மாகாணங்களுக்கு இடையிலான சேவையை ஆரம்பித்துள்ளதாகவும் தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
இலங்கையை தாக்கவுள்ள சூறாவளி எச்சரிக்கை!
இறைமையுள்ள நாடு ரீதியில் தீர்மானம் எடுக்கக்கும் வல்லமை அரசாங்கத்திற்கு உள்ளது - அமைச்சர் மங்கள சமரவீ...
தகுதியான மாணவர்களுக்கு வாழ்க்கையை வெற்றிகரமாக்கவதற்கு வாய்ப்பை உருவாக்குவது தவறானதா - பாதுகாப்பு செ...
|
|