மாகாணங்களுக்கு இடையிலான பயணக் கட்டுப்பாடுகள் எதிர்வரும் ஜுலை மாதம் 5 ஆம் திகதி வரை அமுலில் இருக்கும்!

Friday, June 25th, 2021

நாடு முழுவதும் அமுல்படுத்தப்பட்டிருந்த பயணக் கட்டுப்பாடு இன்று அதிகாலை 4 மணியுடன் தளர்த்தப்பட்டுள்ளது.  

அத்துடன் பயணக் கட்டுப்பாடு தளர்த்தப்பட்ட போதிலும், மாகாணங்களுக்கு இடையிலான பயணக் கட்டுப்பாடுகள் எதிர்வரும் ஜுலை மாதம் 5 ஆம் திகதி வரை அமுலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, பயணக் கட்டுப்பாடு தளர்த்தப்பட்டுள்ள போதிலும், பொது போக்குவரத்து சேவைகள் மாகாணங்களுக்குள் இன்றையதினம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், எதிர்வரும் திங்கட்கிழமைமுதல் மாகாண எல்லைகளை தாண்டி அத்தியாவசிய சேவைகளுக்காக சில பொது போக்குவரத்துக்களை ஈடுபடுத்துவது தொடர்பில் தற்போது கலந்துரையாடப்பட்டு வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

பொசன் போயா தினத்தை முன்னிட்டு மக்களின் நடமாட்டத்தை கட்டுப்படுத்துவதற்காக நேற்றுமுன்தினம் இரவு 11 மணிக்கு மீண்டும் போக்குவத்து கட்டுப்பாடு அமுல்படுத்தப்பட்டதுடன், இன்று அதிகாலை 4 மணிமுதல் தளர்த்தப்பட்டுள்ளது.

எனினும் வீட்டில் இரண்டு பேர் மாத்திரமே வெளியில் செல்வதற்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளதுடன், பட்டியல்படுத்தப்பட்டுள்ள தொழில் நடவடிக்கைகளுக்கும் அரசாங்கம் அனுமதியளித்துள்ளது.

போக்குவரத்து கட்டுப்பாடுகளை தொடர்ந்து விதிக்குமாறு சுகாதார தரப்பினர் அரசாங்கத்துக்கு ஆலோசனைகளை வழங்கவரும் சூழலில் இன்றையதினம் நடைபெறவுள்ள கொவிட் தொடர்பிலான ஜனாதிபதி செலணியில் இதுகுறித்து இறுதி முடிவுகள் எடுக்கப்படுமென இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது

Related posts: