மாகாணங்களுக்கிடையிலான பயணத்தடை மேலும் ஒரு வாரங்களுக்கு நீடிப்பு – எல்லைகளில் தீவிர சோதனைகளுக்கும் உத்தரவு!
Friday, October 15th, 2021மாகாணங்களுக்கு இடையில் அமுலில் உள்ள பயணக்கட்டுப்பாடுகளை எதிர்வரும் 21 ஆம் திகதி வரை மேலும் இறுக்கமாக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இன்றையதினம் ஜனாதிபதி தலைமையில் இணைவழியாக இடம்பெற்ற கொவிட் ஒழிப்புக்கான தேசிய செயலணி கூட்டத்தில் இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
அதற்கமைய, எதிர்வரும் 19 மற்றும் 20 ஆம் திகதிகளில் வரும் விடுமுறையுடன் ஆரம்பமாகும் நீண்ட வார இறுதி விடுமுறைகள் காரணமாக மாகாணங்களுக்கு இடையிலான எல்லைகளில் கடுமையான சோதனை நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பாதுகாப்பு பிரிவினருக்கு உத்தரவிட்டுள்ளதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Related posts:
25 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு முச்சக்கரவண்டி ஓட்டுவதற்கான அனுமதிப்பத்திரம் வழங்குவது தடை!
எதிர்க்கட்சி தலைவராக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ?
அபாயகர பிரதேசங்களில் வசிக்கும் 12 ஆயிரம் குடும்பங்களை பாதுகாப்பான இடங்களில் குடியமர்த்த நடவடிக்கை – ...
|
|