மாகாணங்களின் ஆளுநர்களுக்கு இடமாற்றம் !

கிழக்கு மாகாணம் தவிர்ந்த ஏனைய எட்டு மாகாணங்களினதும் ஆளுநர்களை மாற்றுவதற்கு தீர்மானித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
ஜனாதிபதியின் பாகிஸ்தான் விஜயத்திற்கு முன்னர் ஒன்பது மாகாணங்களினதும் ஆளுநர்களை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளதாவும், இதன்போது, குறித்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
மேல் மாகாண ஆளுனர், கே.சி.லோகேஸ்வரன், வட மாகாண ஆளுனராக நியமிக்கப்படவுள்ளார். தற்போது வட மாகாண ஆளுனராக உள்ள ரெஜினோல்ட் குரே, மத்திய மாகாண ஆளுனராக நியமிக்கப்படவுள்ளார்.
ஊவா மாகாண ஆளுனர் ஜெயசிங்க, வடமத்திய மாகாணத்துக்கும், மத்திய மாகாண ஆளுனர், நிலுக்க எக்கநாயக்க, சப்ரகமுவ மாகாணத்துக்கும், சப்ரகமுவ ஆளுனர் மொர்ஷல் பெரேரா தென் மாகாணத்துக்கும் மாற்றப்படவுள்ளனர்.
தென் மாகாண ஆளுனர் ஹேமகுமார நாணயக்கார, மேல் மாகாணத்துக்கும் வடத்திய மாகாண ஆளுனர் பி.பி.திசநாயக்க,வடமேல் மாகாணத்துக்கும் மாற்றப்படவுள்ளனர்.
எனினும், ஊவா, தென் மாகாணங்களின் ஆளுனர்களின் இடமாற்றங்கள் இன்னமும் உறுதிப்படுத்தப்படவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.
கிழக்கு மாகாண ஆளுனர் றோகித போகொல்லாகம அண்மையிலேயே நியமிக்கப்பட்டவர் என்பதால், அவர் இவர் இடமாற்றம் செய்யப்படமாட்டார் என்றும் மேலும் செய்திகள் வெளியாகியுள்ளன.
Related posts:
|
|