மஹிந்தவின் மனுவை விசாரிக்க ஐவர் அடங்கிய குழுவை நியமிக்குமாறு கோரிக்கை!

Thursday, December 13th, 2018

மஹிந்த உட்பட முன்னாள் அமைச்சரவை உறுப்பினர்களை அந்த பதவியில் கடமையாற்ற விடாது விடுக்கப்பட்டுள்ள இடைக்கால தடை உத்தரவை நீக்குமாறு மஹிந்த ராஜபக்ஷ தரப்பு தாக்கல் செய்த மேன்முறையீட்டு மனுவை ஐவர் அடங்கிய நீதிமன்ற குழுவின் ஊடாக விசாரணை செய்யுமாறு மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

ரணில் விக்ரமசிங்கவின் சட்டத்தரணியினால் இந்த மனு இன்று உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இதனிடையே குறித்த மனு நேற்று உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட சந்தர்ப்பத்தில் குறித்த வழக்கை 14 ஆம் திகதி வரையில் ஒத்தி வைக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

மஹிந்த ராஜபக்ஷ உட்பட முன்னாள் அமைச்சரவை உறுப்பினர்கள் 17 பேரினால் குறித்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இதன் பிரதிவாதிகளாக ஐக்கிய தேசிய கட்சி, தமிழ் தேசிய கூட்டமைப்பு, மக்கள் விடுதலை முன்னணி, ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஆகிய கட்சிகளின் 122 உறுப்பினர்களின் பெயர் குறிப்பிடப்பட்டுள்ளது.

தங்களுடைய பதவியில் கடமையாற்ற விடாது மேன்முறையீட்டு நீதிமன்றத்தினால் விதிக்கப்பட்டுள்ள இடைக்கால தடையுத்தரவு அரசியலமைப்பிற்கு விரோதமானது என குறித்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இவ்வாறான ஒரு தீர்ப்பை வழங்க மேன்முறையீட்டு நீதிமன்றத்திற்கு எவ்வித அதிகாரமும் இல்லை எனவும் குறித்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Related posts: