மஹிந்தவின் அதிரடி அறிவிப்பு!

Monday, November 5th, 2018

எந்தவொரு தேர்தலையும் நடாத்துவதற்கு தயார் என தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார் என செய்திகள் வெளியாகியுள்ளன.

நாம் சரியாக தீயணைப்புப் படைவீரர்களைப் போன்றவர்கள். தேர்தலை நடத்துமாறு உத்தரவு கிடைக்கப் பெற்ற உடனே நாம் செயற்படத் தொடங்குவோம்.

மாகாணசபைத் தேர்தலை நடாத்துவதற்கும் நாம் ஆயத்தமாகவே இருக்கின்றோம், உத்தரவு பிறப்பிக்கப்பட்டால் செயற்படத் தயார்.

ஜனாதிபதி தேர்தலோ அல்லது நாடாளுமன்றத் தேர்தலோ எது அறிவிக்கப்பட்டாலும் அதனை நடாத்துவதற்கு நாம் பூரண ஆயத்த நிலையில் இருக்கின்றோம் என மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.

Related posts: