மஹாபொல நிதியத்துக்கு புதிய பெயர் மாற்றம் – வர்த்தக அமைச்சருமான பந்துல குணவர்தன தெரிவிப்பு!

பல்கலைக்கழக மாணவர்களுக்கு நிதி உதவி வழங்கப்படும் மஹாபொல உயர்கல்வி புலமைப்பரிசில் நம்பிக்கை நிதியத்தின் பெயரினை லலித் அதுலத்முதலி உயர்கல்வி உதவித் தொகை நம்பிக்கை நிதியம் என்று மாற்றப்படவுள்ளதாக மஹாபொல நிதியத்தின் தற்போதைய தலைவரும் வர்த்தக அமைச்சருமான டொக்டர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.
பொருளாதாரத்தில் பின்தங்கிய குடும்பங்களைச் சேர்ந்த, பல்கலைக்கழக கல்வி வாய்ப்பைப் பெறும் மாணவர்களுக்கு தனது சொந்தப் பணத்தில் நிதியத்தைத் தொடங்கிய மறைந்த வர்த்தக அமைச்சர் லலித் அதுலத்முதலிக்கு நன்றி தெரிவிக்கும் முகமாக இந்த பெயர் மாற்றம் இடம்பெறுவுள்ளதாக அமைச்சர் பந்துல குணவர்தன மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
உள்ளூராட்சி தேர்தல்: கடமைகளில் ஈடுபட்ட அரச ஊழியர்களுக்கான கொடுப்பனவு விபரம்!
செப்டம்பர் 30ம் திகதிக்கு முன்னர் மாகாண சபைத் தேர்தல் - மஹிந்த தேசப்பிரிய!
2021 ஆம் ஆண்டுக்கான. உயரதர மற்றும் புலமைப்பரிசில் பரீட்சைகள் பிற்போடப்படும் சாத்தியம் - ஆராயப்படுவ...
|
|