மஹர சிறை கைதிகள் நால்வரின் சடலங்களை தகனம் செய்ய வத்தளை நீதிமன்றம் உத்தரவு!

Wednesday, December 16th, 2020

மஹர சிறை மோதலில் சுட்டுக் கொல்லப்பட்ட கைதிகள் நால்வரின் சடலத்தை புதைக்கும் கோரிக்கையை நிராகரித்து, தகனம் செய்ய சுகாதார சேவைகள் பணிப்பாளருக்கு வத்தளை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அண்மையில் இடம்பெற்ற மஹர சிறை மோதலில் கொல்லப்பட்ட 11 கைதிகளில் நால்வர் துப்பாக்கி சூட்டில் இறந்தமை பிரேத பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டுள்ளது.

குறித்த 4 சடலங்கள் தொடர்பான தீர்ப்பு இன்று மதியம் 1 மணிக்கு வத்தளை நீதிவான் நீதிமன்றால் வழங்கப்பட்டது. கொல்லப்பட்ட கைதிகளில் 9 பேருக்கு கொரோனா தொற்று இருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts: