மஹர சிறைச்சாலையின் விவகாரம் – 6 கோடிக்கும் அதிக பெறுமதி கொண்ட சொத்துகளுக்கு சேதம் – மதிப்பீட்டுக் குழு மதிப்பீடு!

Friday, January 15th, 2021

அண்மையில் மஹர சிறைச்சாலையில் ஏற்பட்ட அமைதியின்மை காரணமாக 6 கோடிக்கும் அதிக பெறுமதி கொண்ட சொத்துகளுக்கு சேதம் ஏற்பட்டுள்ளதாக அதற்காக நியமிக்கப்பட்ட மதிப்பீட்டு சபையால் மதிப்பிடப்பட்டுள்ளது.

எனினும் குறித்த சம்பவத்தால் ஏற்பட்ட சொத்து சேதம் உள்ளிட்ட இழப்புக்கள் உத்தியோகபூர்மாக அறிவிக்கப்படவுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களத்தின் ஊடகப் பேச்சாளர் சந்தன ஏக்கநாயக்க தெரிவித்துள்ளார்.

அத்துடன் குறித்த சம்பவத்தின் போது அரச சொத்துக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்திய குற்றச்சாட்டின் கீழ் அமைதியற்ற வகையில் செயற்பட்ட 120 பேருக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்படவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மஹர சிறைச்சாலையில் ஏற்பட்ட மோதல் சம்பவத்தின் போது சில கட்டிடங்கள், ஒளடத களஞ்சியசாலை மற்றும் ஆவண அறை உள்ளிட்ட சொத்துகளுக்கு சேதம் ஏற்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts: