மழை நீர் புகுந்ததால் யாழ். பதிவாளர் நாயகத்தின் திணைக்களத்தின் செயற்பாடுகள் இரு நாட்களுக்கு நிறுத்தம்!

யாழ் மாவட்ட பதிவாளர் நாயகம் திணைக்களத்தில் இரண்டு நாட்களுக்கு பொதுமக்களுக்கான சேவை இடம்பெற மாட்டாது என யாழ் மாவட்ட பதிவாளர் நாயகம் நடராஜா அறிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில் –
யாழ் மாவட்ட செயலகத்தில் இயங்கும் பதிவாளர் நாயகம் திணைக்கள அலுவலகமானது கடும் மழையினால் நான்கு மாடிகளைக் கொண்ட குறித்த கட்டிடத்திற்குள் மழை நீர் உட்புகுந்து அலுவலகம் முழுவதும் வெள்ளத்தால் மூழ்கியுள்ளது.
குறித்த அலுவலகத்தில் ஏற்பட்டுள்ள வெள்ள அனர்த்தமானது எதிர்பார்க்காத ஒரு விடயம் எனவும் எனினும் குறித்த அலுவலகத்தில் உள்ள ஆவணங்களுக்கு எதுவித பாதிப்பும் ஏற்படவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
அத்துடன் அலுவலகம் பூராகவும் வெள்ளநீர் தேங்கியிருப்பதால் அலுவலக செயற்பாடுகள் இரு நாட்களுக்கு இடம்பெறாது. எனினும் அத்தியாவசியமான சேவைகளை மாத்திரம் மக்கள் பெற்றுக்கொள்ள முடியும், எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
|
|