மழை ஓய்ந்துள்ள போதிலும் காற்றின் வேகம் பலமாக இருக்கும்.
Wednesday, May 31st, 2017
சீரற்ற காலநிலை காரணமாக நாட்டின் பலபாகங்களிலும் அண்மைநாட்களாக பெய்த மழை சற்று ஓய்ந்துள்ள போதிலும் காற்றின் வேகம் சற்றுப் பலமாக இருக்குமென தெரிவிக்கப்படுகின்றது.
இருந்தபோதிலும் ஆங்காங்கு சில இடங்களில் மழை பெய்யுமென வானிலை அவதான நிலையம்தெரிவித்துள்ளதாகவும்ரூபவ் கரையோரத்தில் வாழும் மக்களை அவதானமாக இருக்குமாறும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக கடற்றொழிலாளர்களை தொழிலுக்கு செல்ல வேண்டாமென்றும் மறுஅறிவித்தல்வரை இந்நடைமுறையைப் பின்பற்றுமாறும் கேட்டுக்கொள்ளப்படுகின்றனர். இந்நிலையில் மழைவீழ்ச்சி தொடரும் வாய்ப்புகள் இருப்பதாகவும்ரூபவ் அதுதொடர்பிலும் மக்களை அவதானத்துடன் இருக்குமாறும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு வீசும் காற்றின் வேகம் நாட்டின் பலபாகங்களிலம் வேறுபட்ட வேகத்தில் வீசுமென்றும் இதன்போதும் ஏற்படக்கூடிய அனர்த்தங்கள் தொடர்பிலும் அவதானமாக இருக்குமாறும் பொதுமக்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
|
|