மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் – வளிமண்டலவியல் திணைக்களத்தின் அறிவுறுத்தல்!

Saturday, May 29th, 2021

நாட்டில் இன்றையதினம் ஊவா மாகாணம் மற்றும் அம்பாறை, மட்டக்களப்பு ஆகிய மாவட்டங்களின் ஒரு சில இடங்களில் மாலை அல்லது இரவு நேரங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.

அதேவேளை சப்ரகமுவ மாகாணத்திலும், நுவரெலியா மற்றும் கண்டி ஆகிய மாவட்டங்களிலும் சில நேரங்களில் மழை பெய்யும்.

இந்த பகுதிகளில் சில இடங்களில் மணிக்கு 50 மில்லி மீற்றர் மழைவீழ்ச்சி பதிவாகும்.

மேற்கு மற்றும் வடமேற்கு மாகாணங்களிலும், காலி மற்றும் மாத்தறை ஆகிய மாவட்டங்களிலும் பலத்த மழை பெய்யும்.

மேலும் மத்திய,வடமேற்கு மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டத்தின் மேற்கு சரிவில் சில நேரங்களில் காற்றின் வேகமானது மணிக்கு 40 கிலோமீற்றர் வேகத்தில் அதிகரிக்கும்.

எனவே இடியுடன் கூடிய மழைக்காலங்களில் பலத்த காற்று மற்றும் மின்னல் ஆகியவற்றால் ஏற்படும் சேதங்களைக் குறைக்க போதுமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு வளிமண்டலவியல் திணைக்களம் பொது மக்களிடம் கேட்டுக் கொண்டுள்ளது.

Related posts: