மழையுடன் கூடிய காலநிலை : நீர் மின் உற்பத்தி அதிகரிப்பு!

Tuesday, October 2nd, 2018

நாட்டில் பல பிரதேசங்களுக்கு பெய்து வரும் மழையுடன் கூடிய காரணமாக நீர் மின் உற்பத்தி நிலையங்களுக்கு அருகில் உள்ள நீர்த்தேக்கங்களது நீர்மட்டமானது 75% வரை உயர்வடைந்துள்ளதாகவும் அதன்படி, நீர் மின் உற்பத்தியானது 25% இலிருந்து 35% வரையில் உயர்ந்துள்ளதாக மின்சார சபை சுட்டிக்காட்டியுள்ளது.

நடைபெற்ற வறட்சியுடன் கூடிய காலநிலை காரணமாக நீர் மின் உற்பத்திக்கு பயன்படுத்தும் நீர்த்தேக்கங்களது நீர் மட்டம் அதிகளவு குறைந்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

உடவலவ நீர்த்தேக்கத்தின் நீர் மட்டமானது அண்மையில் 20% வரை கீழிறங்கி இருந்த நிலையில் தற்போது நீர் மட்டமானது 46% இற்கு உயர்ந்துள்ளது.

கொத்மலை நீர்த்தேக்கத்தின் நீர் மட்டமானது 85% வரையிலும், மாவுஸ்ஸாகலை நீர்த்தேக்க நீர் மட்டமானது 76.6% வரையிலும், விக்டோரியா நீர்த்தேக்க நீர்மட்டமானது 81.6% ஆகவும் உயர்ந்துள்ளது.

Related posts: