மழையுடனான வானிலை இன்றுடன் குறைவடைந்தாலும் நாட்டின் தென்மேற்கு பகுதிகளில் இடைக்கிடையே மழை பெய்யும் – வளிமண்டலவியல் திணைக்களம்!

Sunday, June 6th, 2021

கடும் மழையுடனான வானிலை இன்றுடன் குறைவடைகின்ற போதிலும் நாட்டின் தென்மேற்கு பகுதிகளில் இடைக்கிடையே மழை பெய்யக் கூடும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது.

வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

குறிப்பாக, மேல், சப்ரகமுவ, வடமேல், மத்திய மாகாணங்களிலும் காலி, மாத்தறை மாவட்டங்களிலும் இடைக்கிடையே மழை பெய்யக் கூடும் என அத்திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதேவேளை, மழை வீழ்ச்சி குறைவடைந்துள்ளதால் நாட்டில் உள்ள பெரும்பாலான நீர்த்தேக்கங்களின் நீர் மட்டம் சற்று குறைவடைந்துள்ளதாக நீர்ப்பாசன திணைக்களம் தெரிவித்துள்ளது.

எனினும், தெதுருஓயா நீர்த்தேக்கத்தின் 8 வான் கதவுகளில் 4 வான் கதவுகள் தற்போது திறக்கப்பட்டுள்ளன.

எனவே, தெதுருஓயாவிற்கு அருகில் வாழும் மக்கள் அது குறித்து அவதானமாக செயற்படுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அத்துடன், தற்போது நிலவும் வெள்ளப்பெருக்கு நிலை படிப்படியாகக் குறைவடையக்கூடும் எனவும் நீர்ப்பாசன திணைக்களம் எதிர்வு கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts: