மழையால் பாதிக்கப்பட்டுள்ள பூம்புகார் பகுதி மக்களுக்கு ஈழமக்கள் ஜனநாயக கட்சியால் உதவிகள் வழங்கிவைப்பு!

அடைமழையால் பாதிக்கப்பட்டுள்ள அரியாலை கிழக்கு பூம்புகார் பகுதியில் வாழும் வறிய மக்களுக்கு ஈழமக்கள் ஜனநாயக கட்சியினால் நிதியுதவி மற்றும் கூரைத்தகடுகள் வழங்கிவைக்கப்பட்டுள்ளது.
குடாநாட்டில் பெய்துவரும் அடைமழை காரணமாக பாதிக்கப்பட்டு பல அசௌகரியங்களை சந்தித்துவரும் குறித்த பகுதி மக்களது நிலைகைளை இன்றையதினம் ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தாவின் பணிப்பிற்கமைய நேரில் சென்ற ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் நல்லூர் பிரதேச நிர்வாக செயலாளர் அம்பலம் இரவீந்திரதாசன் மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை பார்வையிட்டதுடன் அவர்களுக்கு தேவையான அடிப்படைத் தேவைகளை பெற்றுக்கொடுத்ததுடன் தெரிவு செய்யப்பட்ட மிகவறிய குடும்பங்களுக்கு நிதியுதவியும் வழங்கிவைத்துள்ளார்.
இதனிடையே தற்போது பெய்துவரும் பருவமழையால் குடாநாட்டின் பல பகுதியிலும் வாழும் மக்கள் பல்வேறுபட்ட அசௌகரியங்களை சந்தித்துவருகின்றனர். குறித்த மக்களது வாழ்வியல் நிலைமைகள் தொடர்பில் ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் ஒவ்வொரு பிரதேச நிர்வாக செயலாளர்களும் தமது பகுதிகளிலுள்ள நிலைமைகளை ஆராய்ந்து பாதிக்கப்பட்ட மக்களுக்கான உடனடித் தேவைகளை நிவர்த்திசெய்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
|
|