மழையால் அவதியுறும் எமக்கு கூரைத்தகடுகளை பெற்றுத்தாருங்கள் – ஈ.பி.டி.பி கட்சியிடம் பூம்புகார் பகுதி மக்கள் கோரிக்கை!

தொடரும் மழை காரணமாக பல அசௌகரியங்களை எதிர்கொண்டுவரும் எமது பகுதியிலுள்ள குடிமனைகளுக்கு தற்காலிக தீர்வாக கூரைத்தகடுகளை பெற்றுத்தருவதற்கான ஏற்பாடுகளை செய்து தருமாறு ஈழமக்கள் ஜனநாயக கட்சியிடம் அரியாலை பூம்புகார் பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இன்றையதினம் குறித்த பகுதி மக்களது நிலைமைகளை நேரில் சென்று ஆராய்ந்தறிந்துகொண்ட ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் நல்லூர் பிரதேச நிர்வாக செயலாளர் அம்பலம் இரவீந்திரதாசனிடமே குறித்த கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.
மக்களது நிலைமைகளையும் கோரிக்கையையும் கேட்டறிந்துகொண்ட இரவிந்திரதாசன் அவற்றை செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தாவினது பார்வைக்கு கொண்டு சென்று தீர்வுகளை பெற்றுத்தருவதற்கான முயற்சிகளை மேற்கொள்வதாக துள்ளார்.
Related posts:
கொரோனா அச்சுறுத்தல்: வெளிநாடுகளில் சிக்கியிருந்த 304 பேர் நாடு திரும்பியுள்ளனர்!
இன்று முதல் சிறைச்சாலைகளுக்கு STF பாதுகாப்பு - சிறைச்சாலைகள் ஆணையாளர் தெரிவிப்பு!
மாலைதீவு ஜனாதிபதி இப்ராஹிம் - ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ச சந்திப்பு – இருதரப்பு உறவுகள் தொடர்பில் கலந்த...
|
|