மழைக் காலத்தை எதிர்கொள்ள குடாநாட்டில் தயார்படுத்தல்கள் ஆரம்பம்!

Thursday, September 27th, 2018

யாழ்ப்பாணக் குடாநாட்டில் உள்ள வெள்ளவாய்க்கால் மற்றும் மதகுகள் போன்றவற்றை துப்புரவு செய்யும் பணிகள் இடம்பெற்று வருகின்றன.

மழை காலத்தில் வெள்ளம் வழிந்தோட வசதியாக இந்த வெள்ள வாய்க்கால்கள் துப்புரவு செய்யப்பட்டு வருகின்றன என வீதி அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்தது. மதகுகள், வெள்ள வாய்க்கால்களில் சிலர் கழிவுகளைக் கொட்டி விட்டுச் செல்கின்றனர்.

இவ்வாறு கழிவுகள் கொட்டப்படுவதனால் மழைக்காலத்தில் வெள்ளம் வழிந்தோட முடியாது தேங்கி நிற்கும் நிலை ஏற்படுவதாகச் சுட்டிக்காட்டப்பட்டது. மதகுகள், வாய்க்கால்களில் இவ்வாறு கழிவுகள் கொட்டுவோர் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ளவும் உள்ளுராட்சிச் சபைகள் தீர்மானித்துள்ளன.

Related posts: