மழைக்காலப் பயிர்ச்செய்கையை மேம்படுத்துவதற்கு நிதி ஒதுக்கீடு!

Monday, November 28th, 2016

மழைக்காலத்தில் பயிர்ச்செய்கையை மேற்கொள்ளக்கூடிய கட்டமைப்பு என்ற தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்துவதற்காக மாகாண விவசாயத் திணைக்களத்தால் குறித்தொதுக்கப்பட்ட அபிவிருத்தி நிதியில் இருந்து 1.2மில்லியன் ரூபா நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. என யாழ்.மாவட்ட விவசாயத் திணைக்கள வட்டாரங்கள் தெரிவித்தன.

மழைக்காலத்தில் மழைத்துளிகளின் தாக்கம் காரணமாக பூ அரும்புகள் உதிரல் மற்றும் பூக்கண் அடைத்தல் என்பன நிகழும். பூக்களின் உற்பத்தி பாதிக்கப்பட்டு மரக்கறிகளின் செய்கை வீழ்ச்சியடைகின்றன. மரக்கறிகளின் விலையும் உச்சத்தை அடைகின்றன. மழைக்காத்தில் மரக்கறிகளின் செய்கையை அதிகமாக்குவதற்கு பயிற்செய்கையை மேற்கொள்ளக்கூடிய கட்டமைப்பு என்ற தொழில்நுட்பத்தின் கீழ் தற்போது 24 பயனாளிகள் இணைத்து கொள்ளப்பட்டுள்ளனர். நெடுந்தீவு, கரவெட்டி, புலோலி, சண்டிலிப்பாய், தெல்லிப்பழை, புத்தூர், உடுபிட்டி, நல்லூர் ஆகிய விவசாயப் போதனாசிரியர் பிரிவுகளில் இருந்து குறித்த பயனாளிகள் தெரிவு செய்யப்பட்டுள்ளனர். அவர்களுக்கு விவசாயப் போதனாசிரியர்கள் மூலம் தொழில்நுட்ப வழிகாட்டல் பயிற்சிகள் வழங்கப்படும். இந்த மரக்கறிச் செய்கையின் கட்டமைப்பின் பெறுமதி ஒரு லட்சம் ரூபா ஆகும். பயனாளிகள் ஒவ்வொருவருக்கும் 50ஆயிரம் ரூபா வழங்கப்படவுள்ளது. முதற்கட்டமாக 25ஆயிரம் ரூபா வழங்கப்பட்டுள்ளது. இதன் வேலைகள் பூரணமான பின் மிகுதி 25ஆயிரம் ரூபா வழங்கப்படும். இந்த கட்டமைப்பின் 80 வீதமான நடவடிக்கைகள் பூரணமடைந்துள்ளன – என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

img_3321-kopie

Related posts:


இயற்கை இடரினால் பாதிக்கப்பட்ட பிரதேசங்களுக்கு வழங்க யாழ்.மாவட்டச் செயலகத்தினாலும்  நிவாரணப் பொருட்கள...
நாம் ஆட்சிக்கு வந்தது கொழும்பிலிருந்து ஆட்சி செய்வதற்கல்ல – கிராம மக்களிடம் சென்று அவர்களின் தேவைகளை...
தொடரும் சீரற்ற வானிலை - பொதுமக்கள் அவதானத்துடன் செயற்பட வேண்டும் - அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலைய...