மல்லாகத்தில் பொலிஸார் துப்பாக்கி பிரயோகம் – இளைஞர் ஒருவர் பலி!

Sunday, June 17th, 2018

யாழ்.மல்லாகம் சந்தியில் பொலிஸாரின் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி சூட்டுப் பிரயோகத்தில் இளைஞர் ஒருவர் பலியாகியுள்ளார். சூட்டுச் சம்பவத்தின் பின்னர் அப்பகுதியில் பதற்றம் நிலவுகின்றது.

இரு குழுக்கழக்கு இடையே ஏற்பட்ட மோதலையடுத்தே குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.  மல்லாகம் குளமங்கால் பகுதியைச் சேர்ந்த பாக்கியராஜா சுதர்சன் (வயது 28) என்ற இளைஞரே உயிரிழந்துள்ளார்.

மல்லாகம் சகாயமாதா கோவில் பெருநாள் இன்று ஞாயிற்றுக்கிழமை மாலை (17)நடைபெற்றுக்கொண்டிருந்த வேளையிலேயே சுன்னாகம் பொலிஸ் துப்பாக்கி பிரயோகத்தினை மேற்கொண்டதாக சம்பவத்தினை நேரில் கண்டவர்கள் தெரிவித்தனர்.

துப்பாக்கிச் சூட்டு பிரயோகத்தில் மற்றொரு இளைஞர் படுகாயமடைந்த நிலையில் தெல்லிப்பளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
துப்பாக்கி பிரயோகம் தொடர்பாக தெல்லிப்பளை பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றார்கள்.

Related posts: