மல்லாகத்தில் கத்திமுனையில் ரூ.2.43 மில்லியன் பொருட்கள் கொள்ளை

Monday, March 14th, 2016

யாழ்ப்பாணம், மல்லாகம் பகுதியிலுள்ள வீடொன்றுக்குள் இன்று (14) அதிகாலை 12.30 மணியளவில் உள்நுழைந்த திருடர்கள், கத்தியை காட்டி வீட்டிலிருந்தவர்களை மிரட்டி அங்கிருந்த நகை மற்றும் பணம் என்பவற்றை கொள்ளையடித்துச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கறுப்புத் துணியால் முகங்களை மூடியபடி கத்திகள், பொல்லுகள் சகிதம் வீட்டுக்குள் நுழைந்த ஐந்து பேர் கொண்ட குழுவொன்று வீட்டிலிருந்தவர்களை மிரட்டி, அங்கிருந்த 2.18 மில்லியன் ரூபாய் பெறுமதியான 50 பவுண் நகை மற்றும் 2 இலட்சத்து 50 ஆயிரம் ரூபாய் ரொக்கப்பணம் என்பவற்றை கொள்ளையடித்துச் சென்றுள்ளது.

மேற்படி வீட்டில் கணவன், மனைவி மற்றும் 3 பிள்ளைகள் வசித்து வருவதாகவும் கணவன் சம்பவ தினத்தில் கொழும்புக்குச் சென்றிருந்த நிலையிலேயே இந்தக் கொள்ளைச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இது தொடர்பில் தெல்லிப்பளை பொலிஸ் நிலையத்தில் செய்த முறைப்பாட்டின் பிரகாரம் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Related posts: