மலையக பெருந்தோட்ட மக்களின் சார்பில் 15 பிரதிநிதிகள் நாடாளுமன்றத்தில் உள் வாங்கப்பட வேண்டும் – கல்வி இராஜாங்க அமைச்சர் அரவிந்தகுமார் வலியுறுத்து!

Friday, October 20th, 2023

தேர்தல் தொகுதிகள் மறுசீரமைப்பு அரசியல் கட்சிகளின் கலந்துரையாடலில் மலையகப் பெருந்தோட்ட மக்களின் சார்பாக 15 பிரதிநிதிகள் பாராளுமன்றத்தில் உள் வாங்கப்படவேண்டுமென கல்வி இராஜாங்க  அமைச்சர் அருணாசலம் அரவிந்தகுமார் கோரிக்கைத் விடுத்துள்ளார்.

தற்பொழுது மலையகத்தை பிரதிநிதித்துவப்படுத்தி 9 பிரதிநிதிகள் மாத்திரம் நாடாளுமன்றத்தில் உள்வாங்கப்பட்டுள்ளனர்.

மலையகத்தில் இந்திய வம்சாவளி மக்கள் 15 இலட்சம் பேர் வாழுகின்றனர். குறித்த கலந்துரையாடலில் தொகுதி வாரியாக 160 உறுப்பினர்களும் விகிதாசார அடிப்படையில்  65 உறுப்பினர்களும் மொத்தம் 225 நாடாளுமன்ற உறுப்பினர்கள் நாடாளுமன்றத்தில் அங்கம் வகிப்பதாக வரைபு முறை தொடரில் நீதி அமைச்சார் விஜயதாச ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷவினால் தெளிவுபடுத்தப்பட்ட விடயம் தனக்கு பல்வேறு  சந்தேகங்களை ஏற்படுத்தியுள்ளது. மலையகத்தில் உள்ள தமிழ் மக்களின் விகிதாசார அடிப்படையில் 9 நாடாளுமன்ற உறுப்பினர்கள் மாத்திரம் அங்கம் வகிக்கின்றோம்.

இவற்றினால் வைக்கப்பட்டுள்ள முன்மொழிவை தன்னால் ஏற்கமுடியாது எந்த வடிவில் யோசனைகளை முன்வைத்தாலும் மலையக மக்கள் சார்பாக 15 பிரதிநிதிகளை உறுதிப்படுத்தவேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது

000

Related posts:


பலத்த பாதுகாப்புகளுக்கு மத்தியில் உல்லாசப் பயணிகளுக்காக மீண்டும் திறக்கப்பட்டது கட்டுநாயக்க விமான நி...
40 ஆயிரம் மெற்றிக் தொன் டீசலுடன் இலங்கை வருகைதரும் மற்றுமொரு கப்பல் - இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம...
அரச சேவைகள் ஆணைக்குழுவின் அங்கீகாரம் வழங்கப்படாயால் தேசிய பாடசாலைகளுக்கு 54 அதிபர்களை நியமிக்க முட...