மலையக தமிழரின் வாழ்வாதார மேம்பாட்டுக்கு இந்தியா தொடர்ந்தும் உதவியளிக்கும் – இந்திய வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கர் உறுதி!

மலையக தமிழர்களின் வாழ்வாதார மேம்பாட்டுக்காக இந்தியா தொடர்ந்தும் உதவியளிக்கும் என இந்திய வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கர் உறுதியளித்துள்ளார்.
அத்துடன் கல்வி, சுகாதாரம் மற்றும் விளையாட்டுத்துறை மேம்பாடுகளுக்கும் இந்தியாவின் ஒத்துழைப்புகள் தொடரும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
தோட்ட வீடமைப்பு மற்றும் சமுதாய உட்கட்டமைப்பு வசதிகள் இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமானுக்கும், இந்திய வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கருக்கும் இடையில் சந்திப்பு ஒன்று இடம்பெற்றது. கொழும்பில் உள்ள இந்திய தூதுவரின் அலுவலகத்தில் இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது.
இதன் போது இந்திய அரசின் நிதி பங்களிப்புடன் மலையக பெருந்தோட்டப்பகுதிகளில் முன்னெடுக்கப்பட்டு வரும் அபிவிருத்தி திட்டங்கள், வீடமைப்பு திட்டங்கள் சம்பந்தமாக இதன்போது கலந்துரையாடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
நிறைவேறியது அத்தியாவசிய சேவை சட்டமூலம்!
மீண்டும் பணிப்பகிஷ்கரிப்பில் ரயில்வே ஊழியர்கள்!
கற்பிக்கும் ஆசிரியர்களுடன் கலந்தாலோசித்த பின்னரே பரீட்சை தொடர்பில் இறுதித் தீர்மானம் – கல்வி அமைச்சு...
|
|