மலையக ஆசிரிய உதவியாளர்களை உள்ளீருங்கள் – இலங்கை ஆசிரியர் சேவைச் சங்கம் கல்வி அமைச்சுக்குக் கடிதம்!
Saturday, July 6th, 2019இலங்கை ஆசிரியர் சேவைக்குள் மலையக ஆசிரிய உதவியாளர்களை உள்ளீர்க்குமாறு இலங்கை ஆசிரியர் சேவை சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
இவ்விடயம் தொடர்பில் அவசர கடிதம் ஒன்றை இலங்கை ஆசிரிய சேவைச் சங்கம் கல்வி அமைச்சருக்கு இன்று அனுப்பியுள்ளது.
மலையகத்திலுள்ள பாடசாலைகளில் பல வருடங்களாக ஆசிரிய உதவியாளர்களாக மிகக் குறைந்த சம்பளத்திற்கு சேவையாற்றுபவர்களை ஆசிரியர் சேவைக்குள் உள்ளீர்க்கும் படி கோரிய கடிதம் ஒன்றை கல்வி மற்றும் கல்வி இராஜங்க அமைச்சருக்கு அனுப்பி வைத்துள்ளது.
வடக்கு, கிழக்கு மாகாணங்களில் உள்ள தொண்டர்களுக்கு உடனடியாகவே ஆசிரியர் நியமனம் வழங்கும் அதே நேரம் மலையகத்திலுள்ள ஆசிரிய உதவியாளர்கள் மாற்றான்தாய் மனப்பாங்குடன் புறக்கணிக்கப்பட்டு வருகின்றார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Related posts:
ஓமந்தை புகையிரத - சுவீடன் கொண்டு செல்லப்படும் சிறுமி!
இடைநிறுத்திய பணி இன்றுமுதல் மீண்டும் முன்னெடுக்கின்றது – துறைசார் தரப்பினருடன் கலந்துரையாடி தீர்வு எ...
எரிபொருள் தட்டுப்பாட்டுக்கு மத்தியில் அரச செயற்பாடுகளை முன்னெடுப்பது குறித்து ஜனாதிபதி கோட்டாபய ராஜப...
|
|