மலைநாட்டில் பல நீர்த்தேக்கங்களின் நீர் மட்டம் குறைவடைவு!

Sunday, April 7th, 2019

தேசிய மின்சார சபைக்கு சொந்தமான காசல்ரீ மற்றும் மவுசாகலை ஆகிய நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் தொடர்ந்தும் குறைந்த அளவிலேயே இருக்கிறது.

மவுசாகலை நீர்த்தேக்கத்தின் நீர்மட்டம், உயர் எல்லைக்கு கீழ் 67 அடி குறைவடைந்த நிலையில் இருக்கின்றது. இந்தநிலையில் அங்கு 10 அடி உயரத்துக்கே நீர் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

காசல்ரீ நீர்த்தேக்கத்தின் நீர்மட்டம், உயர் எல்லையில் இருந்து 50 அடி குறைவாக உள்ளதாக தேசிய மின்சார சபையின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.

அதேநேரம் விக்டோரியா நீர்த்தேக்கத்தின் நீர்மட்டம் 36.2 சதவீத்தாலும், ரந்தம்பே நீர்த்தேக்கத்தின் நீர்மட்டம் 14.6 சதவீத்தினாலும் குறைவடைந்துள்ளன.

கொத்மலை நீர்த்தேகத்தின் நீர்மட்டம் 29.7 சதவீதமாக உள்ளது.

சமனலவெ வ நீர்த்தேக்கத்தின் நீர்மட்டம் 12.7 சதவீதமாக பதிவாகி இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts: