மலேஷிய பிரதமர் இலங்கை வந்தடைந்தார்!

Sunday, December 17th, 2017

மலேஷிய பிரதமர் நஜீப் பின் துன் அப்துல் ரஸாக் இலங்கைக்கான விஜயத்தை இன்று மேற்கொண்டு இன்று காலை 8.30 மணியளவில் வருகைதந்துள்ளார். இவர் எதிர்வரும் செவ்வாய்க்கிழமை வரையில் இலங்கையில் தங்கியிருப்பார் என தெரிவிக்கப்படுகின்றது.

ஜனாதிபதி செயலகத்திற்கு அருகாமையில் பிரதமரை வரவேற்பதற்கான விசேட வைபவம் ஒன்று திங்கட்கிழமை இடம்பெறவுள்ளது. ஜனாதிபதியின் அழைப்பை ஏற்று இலங்கை வரும் இவருடன் திங்கட்கிழமை இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்தப்படவுள்ளது.

விஞ்ஞான தொழில்நுட்பம், புதிய உற்பத்திக்கான உடன்படிக்கை ஆகியன தொடர்பில் இரண்டு நாடுகளுக்கிடையில் மூன்று புரிந்துணர்வு உடன்படிக்கைகள் கைச்சாத்திடப்படவுள்ளன.  இந்த உடன்படிக்கையின் மூலம் பொருளாதார அபிவிருத்தி மற்றும் இராஜதந்திர பயிற்சிகளுக்கும் திட்டமிடப்பட்டுள்ளன. இரண்டு நாடுகளுக்கிடையிலான இரஜதந்திர உறவுகள் 60 வருடங்கள் நிறைவடைவதை முன்னிட்டு விசேட முத்திரை ஒன்றும்; கடித உறையொன்றும் வெளியிப்பட ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

Related posts: