மலேஷியாவுக்கும் இலங்கைக்கும் இடையில் சுதந்திர வர்த்தக உடன்பாடு !
Tuesday, December 19th, 2017மலேஷியாவுக்கும் இலங்கைக்கும் இடையில் பல்வேறு துறைகளை அபிவிருத்தி செய்வதற்கு இரு நாட்டுத் தலைவர்களும் இணக்கம் கண்டுள்ளனர். இரு நாடுகளுக்கும் இடையில் சுதந்திர வர்த்தக உடன்பாடுஏற்படுத்தப்படவுள்ளது.
இலங்கை வந்துள்ள மலேஷியப் பிரதமர் நஜீப் ரஸாக்குக்கும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்குமிடையில் நேற்று ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்ற இருதரப்பு பேச்சுவார்த்தையின் போதே இதற்கான இணக்கம் காணப்பட்டுள்ளது.
பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அமைச்சர்களான திலக் மாரப்பன ஜோன் அமரதுங்கஇ ராஜித சேனாரத்ன மலிக் சமரவிக்கிரம சுசில் பிரேம ஜயந்த தலதா அத்துகோரள கயந்த கருணாதிலக்க ஆகியோரும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.
ஜனாதிபதி செயலகத்திற்கு வருகை தந்த மலேஷியப் பிரதமருக்கு மகத்தான வரவேற்பளிக்கப்பட்டது. 21 பீரங்கி வேட்டுக்கள் தீர்க்கப்பட்டு இராணுவ அணிவகுப்பு மரியாதை இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
|
|