மலேரியா நோயை பரப்பும் நுளம்புகள் வட மாகாணத்தில்!

Wednesday, April 25th, 2018

மலேரியா இல்லாத நாடாக 2016ஆம் ஆண்டு இலங்கை அறிவிக்கப்பட்டிருந்தது.

வட மாகாணத்தில் மலேரியாவினைப் பரவும் நுளம்புகள் கண்டறியப்பட்டுள்ளன. இது நோய் பரவுவதற்கான அறிகுறி என்று பதில் சுகாதார அமைச்சர் பைசல் காஸிம் தெரிவித்துள்ளார்.

வெளிநாடுகளிலிருந்து வரும் சுற்றுலாப் பயணிகள் காரணமாக மலேரியா நோய் பரவும் ஆபத்து தொடர்ந்தும் இருப்பதாகவும் அவர் கூறினார்.

உலக மலேரியா தினத்தையொட்டி கொழும்பில் நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் அமைச்சர் இந்த விடயங்களை குறிப்பிட்டார்.

மேலும் மலேரியா நோயுள்ள நாடுகளிலிருந்து சுற்றுலாப் பயணிகள் வருவதால், ஒவ்வொரு ஆண்டும் சுமார் 50 மலேரியா நோயாளர்கள் இனங்காணப்படுவதாகவும் நாட்டுக்குள் வரும் சுற்றுலாப்பயணிகளின் சுகாதாரம் பற்றி எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்றும் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் டொக்டர் அனில் ஜாசிங்க கூறினார்.

Related posts: