மலேரியா நோயிலிருந்து எமது தேசத்தைப் பாதுகாக்க அர்ப்பணிப்புடன் உழைப்போம் – வேலணை பிரதேச சபையின் தவிசாளர் கருணாகரகுருமூர்த்தி!

Thursday, April 26th, 2018

மலேரியா என்னும் உயிர் கொல்லி நோயிலிருந்து மக்களை பாதுகாப்போம் என்று வெறும் பேச்சளவில் மட்டும் கூறிக்கொண்டிருந்துவிடாது அதற்கான செயலுருவையும் அர்ப்பணிப்புடன் நாம் ஒவ்வொருவரும் செய்து அதற்கான முன்னுதாரணமான பிரதேசமாக எமது பிரதேசத்தை உருவாக்கி காட்டுவோம் என வேலணை பிரதேச சபையின் தவிசாளரும் குறித்த பிரதேசத்தின் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் நிர்வாக செயலாளருமான நமசிவாயம் கருணாகரகுருமூர்த்தி தெரிவித்துள்ளார்.

உலக மலேரியா தினத்தை முன்னிட்டு வேலணை பிரதேச சுகாதார பணிமனையால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த விழிப்புணர்வு வீதி நாடகத்தை ஆரம்பித்து வைத்து உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் தெரிவிக்கையில் –

எமது நாட்டிலிருந்து முற்றாக அழிக்கப்பட்ட நோயாக மலேரியா இருந்தாலும் தற்போது அது மீண்டும் நாட்டில் பரவி வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

அத்துடன் டெங்கு நுளம்பை போன்று மலேரியா நுளம்புகளும் வடமாகாணத்தில் பல பகுதிகளில் காணப்படுவதாக யாழ் மாவட்ட சுகாதார தொற்றுநோய் தடுப்பு பிரிவு தெரிவித்துள்ளது. மலேரியா நுளம்பு மீண்டும் மன்னாரில் கண்டுபிடிக்கப்பட்டதாகவும். பின்னர் இது யாழ்ப்பாணம் , கிளிநொச்சி, வவுனியா உள்ளிட்ட வடமாகாண பிரதேசங்களில் காணப்படுவதாகவும் கூறப்படுகின்றது..

எது எவ்வாறாக இருந்தாலும் அப்பாவி மனித உயிர்களுக்கு உயிர் அச்சுறுத்தலை ஏற்படுத்தக்கூடிய இந்த நோயை நாம் மீண்டும் முற்றாக இல்லாதொழிப்பதற்கு உறுதியுடன் உழைக்கவேண்டும்.

கடந்த காலங்களில் எமது கட்சியின் செயலாளர் நாயகம்  டக்ளஸ் தேவானந்தா யாழ் மாவட்டத்தில் குறிப்பாக எமது தீவக பகுதிகளின் சுகாதாரத்தில் அதிக அக்கறையுடன் பல்வேறு சுகாதார நலத்திட்டங்களையும் மருத்துவமனைகளின் அபிவிருத்திகளையும் மேற்கொண்டு கொடுத்து இப்பகுதிகளின் சுகாதார நலன்களை உறுதி செய்து தந்திருந்தார். அத்துடன்  குறித்த துறைசார்  பணியாளர்களாக பலருக்கு தொழில்வாய்ப்புக்களையும் பெற்றுத்தந்திருந்ததையும் நான் நினைவுகூர விரும்புகின்றேன்.

அந்தவகையில் இந்த மலேரியா நோய் தொடர்பான விழிப்புணர்வாக எமது பகுதியின் சுகாதாரப் பிரிவினரால் வீதி நாடகம் ஒன்று அரங்கேற்றப்பட்டுள்ளது. இந்த நாடாகம் பார்த்து மகிழ்ந்துவிட்டு போவதற்கான ஒன்றல்ல. அதை ஆதாராமாக கொண்டு எமது பிரதேசத்தின் சுகாதாரத்தை செழுமையாக்கி மலேரியா நுளம்புகளை இல்லாது ஒழிப்பதற்கான முயற்சிகளை மேற்கொள்ளும் எமது வேலணைப் பிரதேச பொதுசன சுகாதார பிரிவினருக்கு பூரண ஒத்துழைப்பை வழங்குவதனுடன் எமது பிரதேசத்தில் வாழம் மக்கள் ஒவ்வொருவரும் தமது காணிகளையும் வீட்டின் சுற்றுப்புறங்களையும் சுத்தமாக வைத்திருப்பதனூடாக இந்நோயை ஒழிப்பதற்கு பங்ளிப்பை வழங்க முடியும் என தெரிவித்த தவிசாளர் கருணாகரகுருமூர்த்தி நாம் அனைவரும் ஒற்றுமையாக செயற்பட்டு இந்த மலேரியா நுளம்பை இல்லாதொழித்து மீண்டும் எமது நாட்டை மலேரியா அற்ற நாடாக மாற்ற பாடுபடுவோம் என்றார்.

Related posts:

நாளைமுதல் யாழ்ப்பாணத்தில் கொரோனா தடுப்பூசி மருந்து ஏற்றும் பணி ஆரம்பம் - யாழ். போதனா வைத்தியசாலைப் ப...
தேசிய அடையாள அட்டை தகவல்களை தொழில்நுட்ப மயப்படுத்துவதற்கான விஷேட வேலைத்திட்டம் - ஆட்பதிவு திணைக்களத்...
பரந்தன் இரசாயன நிறுவனத்தால் பயன்படுத்தப்படும் காணியை, குறித்த கம்பனிக்கு நீண்டகாலக் குத்தகைக்கு வழங்...

குப்பி விளக்குச் சரிந்து தீப்பிடித்ததில் படுகாயமடைந்த இளம் குடும்பப் பெண் சிகிச்சை பலனின்றி உயிரிழப்...
கொரோனா தொற்றுக்குள்ளானவர்களுக்கு சிகிச்சையளிப்பதற்கு ஒவ்வொரு மாவட்டங்களிலும் மருத்துவ மனைகள் - சுகாத...
எதிர்வரும் 5 ஆம் திகதிமுதல் நாடளாவிய சுகாதார வழிகாட்டல் நடைமுறையில் மாற்றம் - சுகாதார சேவைகள் பணி...