மலேரியாவை முற்றாக ஒழித்துள்ள நாடு இலங்கை!

Friday, August 12th, 2016

இலங்கை மலேரியாவை முற்றாக ஒழித்த நாடாக உலக சுகாதார ஸ்தாபனத்தால் பெயரிடப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

அதற்கான உத்தியோகப்பூர்வ சான்றிதழானது உலக சுகாதார அமைப்பினால் அடுத்த மாதம் சுகாதார அமைச்சிடம் கையளிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அடுத்த மாதம் 5 மற்றும் 6ஆம் திகதிகளில் கொழும்பில் நடைபெறவுள்ள மாநாட்டின் போது சான்றிதழ் கையளிக்கப்படும் என்றும் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

பல வருடங்களாக உலக சுகாதார அமைப்பினால் இலங்கைக்குள் நடத்தப்பட்ட ஆய்வுகள் மூலம் இது உறுதிபடுத்தப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. இதேவேளை கடந்த மாதம் இலங்கை யானைக்கால் நோயினை முற்றாக ஒழித்த நாடாக சுகாதார அமைப்பினால் பிரகடனப்படுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது

Related posts:


மக்கள் எதை எதிர்பார்த்தார்களோ அதை நாம் எமது அரசியல் அதிகார காலப் பகுதியில் செய்து காட்டியிருக்கின்றோ...
"எங்கே நடப்படுகிறாயோ அங்கே மலராகு” என்ற பொன்மொழிக்கு எடுத்துக்காட்டாய் இருப்பவர்கள் ஆசிரியர்கள்...
வெளிநாட்டில் பணிபுரியும் இலங்கையர்கள் நாட்டிற்கு பலமே அன்றி சுமையில்லை - பிரதமர் மஹிந்த ராஜபக்ச தெரி...