மலிங்கவின் இறுதி ஆட்டத்தை காண சென்றார் ஜனாதிபதி!

Saturday, July 27th, 2019

இலங்கை கிரிக்கெட் அணியின் மூத்த வீரரும் புயல் வேகப்பந்து வீச்சாளருமான லசித் மலிங்கா ஒருநாள் ஆட்டங்களில் இருந்து ஓய்வு பெற்றுள்ளார்.

கொழும்பு ஆர்.பிரேமதாஸ மைதானத்தில் வங்கதேசத்துடன் நடைபெற்ற முதலாவது போட்டியே மலிங்கா பங்கேற்கும் கடைசி போட்டி என்பதால் போட்டியை காண ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வருகை தந்திருந்தார்.

இலங்கை அணி அசத்தல் வெற்றி பெற்றதுடன் அணியிலிருந்து மலிங்கா விடைபெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

டெஸ்ட் மற்றும் ஒரு நாள் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றாலும், டி-20 போட்டிகளில் தொடர்ந்தும் ஆடவுள்ளதாக மலிங்கா தெரிவித்துள்ளார். ஆஸ்திரேலியாவில் 2020-ல் நடைபெற உள்ள டி-20 உலக கோப்பை போட்டியிலும் பங்கேற்று ஆடுவேன் என்றும் மலிங்கா தெரிவித்துள்ளார்.

Related posts: