மலரும் தீபத்திருநாள் எமது மக்களுக்கான வாழ்வியல் விடிவை பெற்றுத்தரும் நாளாக அமைய வேண்டும் – முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் தவநாதன்!

Tuesday, November 6th, 2018

மலரும் தீபத்திருநாள் எமது மக்களுக்கான வாழ்வியல் விடிவை பெற்றுத்தரும் நாளாக அமைய வேண்டும், போர் முடிவடைந்து எட்டு வருடங்கள் கடந்த நிலையில் வாழ்வியலில் குறிப்பிடுமளவுக்கு எதனையும் எட்ட முடியாத நிலையிலுள்ள மக்களுக்கான விடிவை இந்த தீபத்திருநாள் கொண்டு வர வேண்டும் என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் கிளிநொச்சி மாவட்ட நிர்வாகச் செயலாளரும் முன்னாள் வடமாகாணசபை உறுப்பினருமான வை.தவநாதன் அவர்கள் தனது தீபாவளி வாழ்த்துச்செய்தியில் தெரிவித்துள்ளார்.

மக்களின் அரசியல் அபிலாஷைகளுக்கு ஏற்ப சாத்தியமான ஏற்புடையதான வழிமுறைகளை தலைமைகள் முன்னெடுப்பதனூடாகவே உண்மையான விடிவை நோக்கிய அரசியல் பயணத்தை வெற்றிகரமாக முன்னகர்த்த முடியும் எனவும் குறிப்பிட்டுள்ள தவநாதன் அவர்கள் துரதிஷ்டவசமாக மக்களின் ஆணையை தொடர்ந்து பெற்றுவரும் தமிழரசுக்கட்சி எமது மக்களின் முன்னேற்றத்திற்காக ஒரு துரும்பைக்கூட தூக்கவில்லை என்பது நடைமுறை அனுபவம் ஆகும்.

 எமது விடிவை நோக்கிய பயணத்தில் மக்கள் சரியாக பாதையில் பயணிப்பதற்கும் சகல செளபாக்கியங்களை பெற்றுக்கொள்வதற்கும் இத்தீபாவளி தினத்தில் உறுதிபூணவேண்டும் என்றும் தவநாதன் அவர்கள் தனது தீபாவளி வாழ்த்துச் செய்தியில் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

thavanathan 1

Related posts: