மற்றுமொரு நிலக்கரி கப்பல் வரவுள்ளதாக இலங்கை நிலக்கரி நிறுவனம் அறிவிப்பு!

Wednesday, May 3rd, 2023

இலங்கைக்கு மற்றுமொரு நிலக்கரி கப்பல் வரவுள்ளதாக இலங்கை நிலக்கரி நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதனால் மின்சார உற்பத்திக்கு தேவையான நிலக்கரிக்கு பற்றாக்குறை ஏற்படாது என்றும் அந்நிறுவனம் கூறியுள்ளது.

நாட்டின் மின்சார உற்பத்திக்கு தேவையான நிலக்கரி கையிருப்பு இருப்பதாக இலங்கை நிலக்கரி நிறுவனம் தெரிவித்துள்ளது.

அதன்படி எதிர்வரும் செப்டம்பர் மாதம் வரை இலங்கைக்கு தேவையான நிலக்கரி இருப்புக்கள் கொண்டு வரப்பட்டுள்ளதாக அந்நிறுவனத்தின் தலைவர் ஹேஷான் சுமனசேகர தெரிவித்துள்ளார்.

இதனால் நுரைச்சோலை மின் உற்பத்தி நிலையத்தை எவ்வித பிரச்சினையுமின்றி இயக்க முடியும் என்றும் அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

இதுவரையில் 29 கப்பல்கள் நாட்டை வந்தடைந்துள்ளது என்றும் இன்றைய தினம் 30 ஆவது கப்பல் இலங்கைக்கு வந்தடையும் என்றும் ஹேஷான் சுமனசேகர தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts: