மற்றுமொரு டீசல் கப்பல் நாளை நாட்டை வந்தடையும் – இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம்!

Thursday, July 14th, 2022

டீசலை ஏற்றிய கப்பலொன்று நாளை (15) நாட்டை வந்தடையவுள்ளதாக இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.

நாட்டை வந்தடையவுள்ள குறித்த கப்பலில் 40,000 மெட்ரிக் தொன் டீசல் கொண்டு வரப்படுவதாக இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் தலைவர் உவைஸ் மொஹமட் தெரிவித்துள்ளார்.

இதற்கான கட்டணம் செலுத்தப்பட்டுள்ளதாகவும் பெற்றோல் மற்றும் டீசல் ஏற்றிய மேலும் சில கப்பல்கள் அடுத்த வாரம் நாட்டை வந்தடையவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: