மற்றுமொரு ஊடகவியலாளருக்கும் கொரோனா தொற்று உறுதி – இதுவரை 5 ஊடகவியலாளர்கள் தொற்றுக்குள்ளாகியுள்ளனர் – சுகாதார தரப்பினர் அறிவிப்பு!

நாடாளுமன்றத்திற்கு செய்தி சேகரிப்பிற்காக சென்று கொரோனா தொற்றுக்கு இலக்காகிய மேலும் ஓர் ஊடகவியலாளர் அடையாளம் காணப்பட்டுள்ளார்.
நாட்டில் இதுவரை 5 ஊடகவியலாளர்கள் தொற்றுக்குள்ளான நிலையில் இறுதியாக அடையாளம் காணப்பட்ட ஊடகவியலாளர் தமிழ் தொலைக்காட்சி ஒன்றில் பணிபுரிபவர் என தெரிவிக்கப்படுகிறது.
இந்நிலையில் ஆங்கிலப் பத்திரிகையை சேர்ந்த ஓர் ஊடகவியலாளர் முதன்முறையாக கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டவராக அடையாளம் காணப்பட்டதுடன், அவருக்குப் பின்னதாக மூன்று ஊடகவியலாளர்களுக்கு தொற்று உறுதிசெய்யப்பட்டது.
இவர்கள் அனைவரும் 20ஆம்,21ஆம் திகதிகளில் நாடாளுமன்றத்தில் நடந்த 20ஆவது திருத்தம் மீதான விவாதம், வாக்கெடுப்புகளை அறிக்கையிடச் சென்றவர்கள்.
இதேவேளை அன்றைய தினத்தில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவும்கூட நாடாளுமன்றத்திற்கு சென்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
Related posts:
மூன்றாம் தவணைக்கான ஆரம்பம்!
உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட வாகனங்களை இன்று அறிமுகப்படுத்தி வைத்தார் அமைச்சர் நாமல் ராஜபக்ச!
“ஆசிரியர்களின் சம்பள முரண்பாட்டுக்கு 2022 பாதிட்டினூடாக கட்டம் கட்டமாக தீர்வு”- இராஜாங்க அமைச்சர் சு...
|
|