மற்றுமொரு ஆசிரியர் குழுவிற்கு 5 ஆயிரம் கொடுப்பனவு!

Tuesday, February 8th, 2022

பிரிவெனா ஆசிரியர்கள், அரச அனுமதிபெற்ற தனியார் பாடசாலை ஆசிரியர்கள் மற்றும் அரச அனுமதிபெற்ற விசேட உதவி பாடசாலைகளின் ஆசிரியர்களுக்காக 5,000 ரூபா கொடுப்பனவை வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அதிபர் – ஆசிரியர் சம்பள குறைபாடுகளை நீக்குதல் தொடர்பான அமைச்சரவை தீர்மானத்திற்கமைய இல 03/2016 (IV) பொது நிர்வாக சுற்றறிக்கை வெளியிட்பட்டது.

இந்த சுற்றறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள ஏற்பாடுகளை, மேற்குறிப்பிட்ட பிரிவைச் சேர்ந்த ஆசிரியர்களுக்கும் ஏற்புடையதாக்கிக் கொள்வதற்காக கல்வியமைச்சரினால் முன்வைக்கப்பட்ட யோசனைக்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: