மறைந்த முன்னாள் பிரதமர் ரட்ணசிறி விக்கிரமநாயக்க சிறந்த ஒரு அரசியல்வாதி – ஜனாதிபதி!

Wednesday, December 28th, 2016

20ஆம் நூற்றாண்டின் மத்திய காலப்பகுதியில் இலங்கை அரசியலில் பிரவேசித்து கிராமிய பிரபுக்கள் தலைமைத்துவத்தை பிரதிநிதித்துவப்படுத்திய பண்பட்ட அரசியல்வாதி மறைந்த முன்னாள் பிரதமர் ரட்ணசிறி விக்கிரமநாயக்க என்று ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

மறைந்த முன்னாள் பிரதமர் ரட்ணசிறி விக்கிரமநாயக்கவின் மறைவை முன்னிட்டு ஜனாதிபதி வெளியிட்ட அனுதாச்செய்தியில் ஸ்ரீறிலங்கா சுதந்திரககட்சியின் முன்னாள் செயலாளருமான ரட்ணசிறி விக்கிரமநாயக்கவின் மறைவையிட்டு தான் ஆழ்ந்த கவலையடைந்திருப்பதாகவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

இந்த அனுதாப செய்தியில் ஜனாதிபதி மேலும் தெரிவித்திருப்பதாவது,

மறைந்த முன்னாள் பிரதமர் ரட்ணசிறி விக்கிரமநாயக்க அரசியல் வரலாற்றில் நேரடியாhக துணிச்சலுடன் கருத்துக்களை தெரிவித்த அரசியல்வாதியாவார்.

மக்கள் ஐக்கிய முன்னணியின் செயற்பாட்டு அரசியலில் பிரவேசித்து லங்கா சமசமாஜக் கட்சியின் பிரதிநிதி என்ற ரீதியில் பாராளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்பட்டார். 1960ம் ஆண்டு காலப்பகுதியில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் இணைந்து கொண்டார். இதன் பின்னர் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் உப தலைவர் பதவியை வகித்ததுடன் அவர் இறக்கும் வரையில் ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகராக பதவி வகித்து வந்தார்.

ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் ஆலோசகராகவும் செயற்பட்ட இவர் கட்சி சவாலுக்கு உள்ளான அனைத்து சந்தர்ப்பங்களிலும் கட்சிக்காக உயர்வான அர்ப்பணிப்புடன் அரசியலில் ஈடுபட்டமை உன்னதமான அரசியல் செயற்பாட்டுக்கு எடுத்துக் காட்டாக அமைந்துள்ளது என்று ஜனாதிபதி தனது அனுதாபச் செய்தியில் தெரிவித்துள்ளார்
எம்முடன் மிக நெருக்கமாக கட்சியின் வெற்றிக்காக பாடுபட்ட முன்னோடி அரசியல்வாதியின் மறைவினால் ஆழ்நத துயருற்று இருக்கும்; அன்னாரினது அன்பு மனைவி மகன் பாராளுமன்ற உறுப்பினரான விதுர விக்கிரமநாயக்க மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் ஹொரண பிரதேச ஆதரவாளர்களுக்கும் தனது ஆழ்ந்த அனுதாபத்தை தெரிவித்துக்கொள்வதாகவும் ஜனாதிபதி இந்த செய்தியில் மேலும் தெரிவித்துள்ளார்.

6166b7a9ea1138bceecc05e40a4ed99c_XL

Related posts:


"யாழ் நகரை  பசுமை  ஆக்குவோம்"  வேலைத்திட்ட  நாளை ஆரம்பம் - வடக்கு மாகாண ஆளுநர் அலுவலுகம் த...
அதிகாரத்துக்கு செலவிடும் பணத்தை வயிற்றுப்பசிக்கு போராடுவோருக்கு வழங்குவதே சிறந்தது - அமைச்சர் நஸீர் ...
வீசா காலத்தை மீறி குவைத்தில் தங்கியிருந்து பணியிடங்களை விட்டு வெளியேறிய இலங்கையர்களுக்கு பொது மன்னிப...