மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவிற்கு ஜனாதிபதி அனுதாபம்!

Tuesday, December 6th, 2016

மக்களின் ஆதரவை வெற்றிகொண்ட தலைவர் என்று மறைந்த முதலமைச்சர் செல்வி ஜெயலலிதாவின் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தனது அனுதாப செய்தியை தனது ருவிற்றர் இணையப்பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

தமிழ்நாடு முதலமைச்சர் மக்களின் ஆதரவை வெற்றிகொண்ட தலைவர் என்று அந்த செய்தியில் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.அவரது மறைவினால் ஆழ்ந்த கவலையில் மூழ்கியுள்ள அவரது அன்பிற்குரிய மற்றும் தமிழ் நாட்டு மக்களுக்கு தனது அனுதாபத்தை தெரிவித்துக்கொள்வதாக அந்த செய்தியில் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை இந்தியப்பிரதமர் நரேந்திரமோடி இந்திய ஜனாதிபதி உள்ளிட்டபலரும் அனுதாபம் தெரிவித்துள்ளனர்.இறுதி அஞ்சலி செலுத்துவதற்காக இந்தி பிரதமர் நரேந்திரமோடி சென்னைக்கு வந்துள்ளார். மேலும் பல பிரமுகர்களும் சென்னை விஜயத்தினை  மேற்கொண்டுள்ளனர்.

இதேவேளை தமிழகத்தின் புதிய முதலமைச்சராக ஓ.பன்னீர்ச்செல்வம் பதவியேற்றுள்ளார். இந்த பதவியேற்பு நிகழ்வு இன்று தமிழக ஆளுனர் மாளிகையில் இடம்பெற்றது.தமிழக முதலமைச்சராக ஓ.பன்னீர்ச்செல்வம் மூன்றாவது முறையாக பதவியேற்பதோடு அமைச்சரவையும் பதவியேற்கின்றனர். இந்த நிகழ்வின்போது மறைந்த தமிழக முதலமைச்சர் இரண்டு நிமிட மௌன அஞ்சலியும் செலுத்தப்பட்டது.

President

Related posts: