மறு அறிவிப்பு வரும் வரை உள்நாட்டு சமையல் எரிவாயு 12.5 கிலோ, 5 கிலோ மற்றும் 2.3 கிலோ விநியோகம் இருக்காது – மக்களுக்கு லிட்ரோ நிறுவனத்தின் முக்கிய அறிவிப்பு!

நாட்டில் மறு அறிவிப்பு வரும் வரை உள்நாட்டு சமையல் எரிவாயு 12.5 கிலோ, 5 கிலோ மற்றும் 2.3 கிலோ விநியோகம் இருக்காது என்று லிட்ரோ எரிவாயு நிறுவனம் தெரிவித்துள்ளது.
மேலும் தற்போது எங்களிடம் எரிவாயு சிலிண்டர்கள் இல்லையெனவும், மறு அறிவிப்பு வரும் வரை மக்கள் வரிசையில் காத்திருக்க வேண்டாம் என லிட்ரோ எரிவாயு நிறுவத்தின் முத்த அதிகாரி கேட்டுகொண்டுள்ளது.
“நாங்கள் விரைவில் ஏற்றுமதியை எதிர்பார்க்கிறோம், சில நாட்களில் விநியோகத்தை மீண்டும் தொடங்க முடியும் என்று நாங்கள் நம்புகிறோம்” என்று அவர் மேலும் கூறினார்.
நாட்டின் பல பகுதிகளில் நேற்றும் சமையல் எரிவாயு கோரி வரிசைகளிலும் மற்றும் போராட்டங்களிலும் ஈடுபட்டமை காண முடிந்தாக அந்த நிறுவனம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
வாக்களிக்கத் தகுதியிருந்தும் பதிவுகளை மேற்கொள்ளாமல் இருப்பவர்கள் உடனடியாக பதிவுசெய்ய வேண்டியது அவசிய...
மாணவர்களுக்கு தினமும் 100 ரூபா! -கல்வி அமைச்சு!
குருதிப் புற்றுநோய் - சிகிச்சை பயனின்றி சிறுவன் உயிரிழப்பு!
|
|