மறு அறிவிப்பு வரும் வரை அனைத்து பாடசாலைகளுக்கும் கல்வி அமைச்சால் விடுக்கப்பட்டுள்ள தடை உத்தரவு!

Monday, July 27th, 2020

மறு அறிவிப்பு வரும் வரை பாடசாலைகளில் நிகழ்வுகள், விளையாட்டு மற்றும் பயிற்சிகளுக்கு கல்வி அமைச்சு தடை விதித்துள்ளது.

அத்துடன் கொரோனா தொற்று தொடர்பான அபாயங்கள் காரணமாக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சின் செயலாளர் ரஞ்சித் சந்திரசேகர தெரிவித்தார்.

எனினும் ஒருவருக்கு ஒருவர் தொடர்பு இல்லாத விளையாட்டு மற்றும் பயிற்சிகள் தொடங்கப்படலாம் என்றும அவர் குறிப்பிட்டுள்ளார்.

தரம் 11,12 மற்றும் 13 மாணவர்களுக்கான கல்வி நடவடிக்கைகள் இன்றுமுதல் மீண்டும் ஆரம்பித்தள்ளன. அத்துடன் தரம் 11,12 மற்றும் 13 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு வகுப்புகள் நடத்த நியமிக்கப்பட்ட ஆசிரியர்கள் மட்டுமே பள்ளிகளில் அனுமதிக்கப்படுவார்கள் என சுட்டிக்காட்டியுள்ள கல்வி அமைச்சின் செயலாளர் காலை 7.30 மணி முதல் பிற்பகல் 3.30 மணி வரை மட்டுமே வகுப்புகள் நடத்த கல்வி அமைச்சு உத்தரவு பிறப்பித்துள்ளது என்றும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts:

ரிஷாட் வீட்டில் பணியாற்றிய 11 பெண்களில் 3 பேர் மரணம் - பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹண தெரிவிப்பு!
இஸ்ரேலில் வேலை வாய்ப்பு - எந்தவொரு வெளி முகவர்களிடமும் பணம் செலுத்த வேண்டாம் - வெளிநாட்டு வேலைவாய்ப்...
நிதி நிறுவனங்களை ஒழுங்குபடுத்த புதிய அதிகார சபை - நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் விஜயதாச ராஜபக...