மறு அறிவித்தல்வரை யாழ்ப்பாணம் உள்ளிட்ட சில மாவட்டங்களுக்கான தொடருந்து சேவைகள் இடைநிறுத்தம் – தொடருந்து திணைக்களம் அறிவிப்பு!

Friday, April 30th, 2021

யாழ்ப்பாணம், கண்டி, பதுளை, பொலனறுவை ஆகிய மாவட்டங்களுக்கான 16 தொடருந்து சேவைகள் நாளைமுதல் மறு அறிவித்தல்வரை இடைநிறுத்தப்படவுள்ளதாக தொடருந்து திணைக்களம் அறிவித்துள்ளது.

கொவிட்-19 பரவல் காரணமாக ஆசனங்களை முன்பதிவு செய்வதில் ஏற்பட்ட வீழ்ச்சியை அடுத்தே இந்தத் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தொடருந்து திணைக்களம் அறிவித்துள்ளது.

எவ்வாறாயினும் வழமை போன்று அலுவலக தொடர்ந்து சேவைகள் இடம்பெறும் எனவும் தொடருந்து திணைக்களம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: