மறுவாழ்வு அதிகார சபையின் இழப்பீட்டுக் கொடுப்பனவு மறுவாழ்வு அமைச்சின் ஊடாகவே வழங்கப்படும் –  யாழ்.மாவட்டச் செயலர் !

Wednesday, January 17th, 2018

மறுவாழ்வு அதிகார சபையின் ஊடாக நட்டஈட்டை பெறுவதற்கு விண்ணப்பித்தவர்களுக்கான இழப்பீட்டுத் தொகை கொழும்பு மறுவாழ்வின் அமைச்சின் ஊடாக மாத்திரமே வழங்கப்படும். இது தொடர்பில் மக்கள் அவதானமாக இருக்க வேண்டும் என யாழ்ப்பாண மாவட்டச் செயலர் நா.வேதநாயகன் அறிவித்துள்ளார்.

இது பற்றி அவர் மேலும் தெரிவித்ததாவது:

மறுவாழ்வு அதிகார சபையின் போர் அனத்த நட்டஈடு தொடர்பான விண்ணப்பங்கள் யாவும் பிரதேச செயலகம் மற்றும் மாவட்டச் செயலகம் ஊடாக கொழும்பு மறுவாழ்வு அதிகார சபைக்கு அனுப்பி வைக்கப்பட்டு பின்னர் கொழும்பு மறுவாழ்வு அதிகார சபையூடாகவே குறிப்பிட்ட பயனாளிகளுக்கான நட்டஈட்டுக் காசோலை அவர்களது வங்கிக் கணக்கிலக்கங்களுக்கு அனுப்பி வைக்கப்படும்.

இந்த விடயம் தொடர்பாக மக்களை ஏமாற்றி சிலர் பணம் பறிக்கின்ற சம்பவங்கள் அண்மைக்காலமாக இடம்பெற்று வருகின்றன. எனவே நட்டஈட்டைப் பெற்றுத் தருவதாகக் கூறி வரும் தனிநபர்களிடமோ அல்லது வேறு யாரிடமோ பணம் கொடுத்து ஏமாற வேண்டாம். அத்துடன் அலைபேசியில் கொழும்பு மறுவாழ்வு அதிகார சபையில் இருந்து கதைக்கின்றோம் எனக் குறிப்பிடுபவர்களிடமும் அவதானமாக இருக்க வேண்டும்.

இந்த விடயம் தொடர்பாக பிரதேச செயலர் மாவட்டச் செயலர் அல்லது மாவட்ட மறுவாழ்வு உதவியாளர் என்போருடன் மட்டும் தொடர்புகொண்டு நட்டஈட்டைப் பெற்றுக் கொள்ளும் நடவடிக்கைகளை பெற்றுக்கொள்ள முடியும் என்றார்.

Related posts: