மறுவாழ்வளிக்கப்பட்ட பட்டதாரிகளுக்கு வேலை வாய்ப்பு!

Saturday, October 20th, 2018

மறுவாழ்வளிக்கப்பட்ட பட்டதாரிகளை அரச நியமனங்களுக்குள் உள்ளீர்க்கும் நோக்கில் பெயர் விபரங்கள் பிரதேச செயலர் பிரிவுகளில் சேகரிக்கப்பட்டு வருகின்றன.

மறுவாழ்வளிக்கப்பட்ட பட்டதாரிகளை அரச நியமனங்களுக்கு உள்வாங்குதல் தொடர்பாக சமர்ப்பிக்கப்பட்ட அமைச்சரவை பத்திரத்துக்கு அமைவாக பட்டதாரிகளின் விபரங்கள் சேகரிக்கப்படவுள்ளன.

யாழ் மாவட்ட செயலகத்தின் ஊடாக அனைத்துப் பிரதேச செயலக பிரிவுகளிலும் உள்ள பட்டதாரிகள் தங்கள் விபரங்களைப் பதிவு செய்ய வேண்டும். பெயர், முகவரி, அடையாள அட்டை இலக்கம் மறுவாழ்வு பெற்று வெளியேறிய திகதி உள்ளிட்ட விபரங்கள் சேகரிக்கப்படவுள்ளன. மறுவாழ்வு பெற்ற பட்டதாரிகள் தங்கள் விபரங்களை பிரதேச செயலகங்களில் பதிவு செய்ய முடியும் என்று தெரிவிக்கப்பட்டது.

Related posts: