மறுபடியும் யாழ்ப்பாணத்தை அச்சுறுத்தும் வாள்வெட்டுக் குழு!

Monday, July 30th, 2018

யாழ்ப்பாணத்தின் பல பகுதிகளில் நேற்று வாள்வெட்டுச் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

யாழ் நகரை அண்மித்த பகுதிகளில் உள்ள பொன்னையாவீதி, கொக்குவில், பிரம்படி வீதி, ஆறுகால்மடம், புதுவீதி ஆகிய பகுதிகளில் உள்ள வீடுகளில் நேற்று மாலை இந்த வாள் வெட்டு தாக்குதல்கள் இடம்பெற்றுள்ளன.

மோட்டார் சைக்கிள்களில் வாள்களுடன் சென்ற குழுவினர் வீடுகளில் உள்ள பொருட்களையும் சேதப்படுத்தியுள்ளனர்.

இதனிடையே மரணச் சடங்கொன்றில் ஏற்பட்ட முரண்பாடு காரணமாக கொடிகாமம் – பருத்தித்துறை வீதியில் நேற்று முன்தினம் இடம்பெற்ற வாள்வெட்டுச் சம்பவத்தில் ஐந்து பேர் காயமடைந்தனர்.

காயமடைந்தவர்கள் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைபெற்றுவந்த நிலையில், நேற்றைய தினம் அவர்கள் மீது மீண்டும் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அத்துடன் தாக்குதலுக்கு உள்ளானவர்களை பார்க்கச் சென்றவர்கள் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Related posts: