மறுபடியும் பொய் கூறுகிறது கூட்டமைப்பு –ஏமாரவேண்டாம் என்கிறார் ஈ.பி.டி.பியின் வேட்பாளர் ஶ்ரீரங்கேஸ்வரன்!

Sunday, August 2nd, 2020

கோட்டாபய அரசாங்கத்திற்கு நாடாளுமன்றத்தில் 2/3 பெரும்பான்மைக்ன ஆதரவை கொடுத்து தமிழர் பிரச்சனைக்கான தீர்வை காணுவோம் என்று தமிழ் அரசு கட்சி சொல்லுகின்ற விடயம் கடந்த முறை தேர்தலின் போது ஒரு வருடத்தில் தீர்வு தருவோம் என்று சொன்னதைப் போலஇ இந்த முறை தேர்தலுக்கான இந்த காலத்திற்கு ஏற்ற பொய் மட்டுமே அது என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் யாழ் மாவட்ட நாடாளுமன்ற வேட்பாளரும் பருத்தித்துறை பிரதேசசபையின் முன்னாள் தலைவருமான ஐயாத்துரை ஸ்ரீரங்கேஸ்வரன் தெரிவித்தார்.

தென்மராட்சி நாவற்குழி கோவிலாக்கண்டியில் இடம்பெற்ற தேர்தல் பிரச்சாரத்தில் பெசும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்.

மஹிந்த கோட்டாபய அரசாங்கம் ஒருபோதுமே தமிழ் தேசிய கூட்டமைப்புடன் சேர்ந்து வேலை செய்யப்போவதில்லை. நாடாளுமன்றத்தில் தமக்குப் பெரும்பான்மை தேவைப்படக்கூடிய சந்தர்ப்பம் ஏற்பட்டால்கூட கூட்டமைப்பின் உதவியை அவர்கள் பெற மாட்டார்கள்.

தமிழ் கூட்டமைப்பினர் தாமாக முன்வந்து பெரும்பான்மையை கொடுக்க முன்வந்தாலும் அவர்கள் அதனைப் பெற மாட்டார்கள்.

ஏனென்றால் கடந்த பத்து ஆண்டுகளில் நடந்த மூன்று ஜனாதிபதி தேர்தல்களிலும் ராஜபக்சவின் கட்சிக்கு எதிராகவே கூட்டமைப்பு செயற்பட்டிருக்கின்றது.

அத்தோடு – 2015ஆம் ஆண்டு தமது ஆட்சியை கவிழ்த்தவர்கள் என்ற ஆதங்கமும் தமிழ் அரசு கட்சி மீது ராஜபக்சவுக்கு உண்டு. “உங்களல்தான் நான் தோற்றேன்” என்று மஹிந்த தன்னிடம் சொன்னதாக வேறு சம்பந்தன் பெருமையாகச் சொல்லித்திரிகின்றார்.

தமிழ் கூட்டமைப்பினர் வெளிச் சக்திகளோடு சேர்ந்து எப்போதும் தமக்கு எதிராக வேலை செய்பவர்கள் என்ற சந்தேகமும் கோபமுமே ராஜபக்சக்களுக்கு உண்டு. அவர்கள் ஒருபோதுமே கூட்டமைப்பினரை நம்ப மாட்டார்கள்.

எனவேதான் சொல்லுகின்றேன் – மஹிந்த – கோட்டா அரசுக்கு நாடாளுமன்றில் ஆதரவு வழங்குவோம் அவர்களின் அமைச்சரவையில் சேருவோம் என்பதெல்லாம் வாக்கு வேட்டைக்காகத் தமிழ் அரசுக் கட்சி சொல்லும் ஒரு ஏமாற்றுக் கதைகள். தமிழ் மக்கள் இந்த முறை ஏமாற மாட்டார்கள்.

உண்மையில் – உரிமைக்கான அரசியலையும் அபிவிருத்திக்கான அரசியலையும் சமமாக முன்னெடுத்துச் செல்வதில் நம்பிக்கை கொண்ட தமிழர்கள் எல்லோரும் எமது கட்சிக்கே வாக்களிக்க வேண்டும்.

இங்கே இன்னுமொரு விடயமும் உண்டு. ராஜபக்ச அரசாங்கத்திற்கு 3/2 பெரும்பான்மை வழங்கி தமிழர் பிரச்சனைக்குத் தீர்வைப் பெறுவோம் என்று ஒருபுறத்தில் மக்களை ஏமாற்றி வாக்குச் சேர்க்கப் பார்க்கின்ற தமிழரசு கட்சியினர்இ மறுபுறத்தில் – எந்த காலத்திலுமே கண்டிராத இராணுவ ஆட்சி ஒன்று வரப்போகின்றது என்று மக்களைப் பயமுறுத்தியும் வாக்கு கேட்கின்றனர். கடந்த பத்து ஆண்டுகளில் இராணுவமே சென்றிராத சிறிய குக்கிராமங்களில் தமக்கு வாக்களித்த ஐந்து பொது மக்களை சந்திக்கச் செல்லுகின்ற போது கூட அதிரடிப்படையை கொண்டு செல்லுகின்றவர்களே இந்த பயமுறுத்தலையும் செய்கின்றனர். அப்படியானால் – இராணுவ ஆட்சி ஒன்றை கொண்டுவரப் போகின்ற அரசாங்கத்துக்கு தேவையான 2/3 ஆதரவையா இவர்கள் கொடுக்கப் போகின்றார்கள் என்ற கேள்வியும் எழுகின்றது. உண்மை என்னவெனில் – தாங்கள் எது சொன்னாலும் அதனை அந்தந்த காலத்தில் நம்பி ஏமாந்து மக்கள் தமக்கு வாக்களிப்பார்கள் என்ற துணிவுதான் தமிழரசு கட்சியினரை அவ்வாறு பேச வைக்கின்றது. இதன் அர்த்தம் ராஜபக்ச அரசாங்கத்தினர் தமிழர்களுக்கு எதுவுமே செய்ய மாட்டார்கள் என்பது அல்ல. ஆனால் தமக்கு எதிராகவே எப்போதும் சூழ்ச்சிகளில் ஈடுபடும் தமிழ் அரசு கட்சிக்கு ஊடாக எதனையும் தமிழ் மக்களுக்கு அவர்கள் செய்ய மாட்டார்கள் என்பதாகும். வடக்கு கிழக்கை பொறுத்தவரை – ராஜபக்ச அரசாங்கத்தினரின் நம்பிக்கையையும் அதன் மூலம் அன்பையும்  அதன் மூலம் மரியாதையையும் பெற்ற ஒரே ஒருவர் தோழர் டக்ளஸ் தேவானந்தா மட்டுமே ஆவார். தமிழர் தாயகத்தைப் பொறுத்தவரை அவர் கேட்பவற்றை மட்டும;அவர்கள் மறுக்காமலும் மறுக்க முடியாமலும் செய்வார்கள். தமக்கு நம்பிக்கையான அவருக்கு ஊடாக மட்டுமே தமிழர்களுக்கு அவர்கள் எதனையும் செய்வார்கள்.

Related posts: