மறவன்புலோவில் தற்கொலை அங்கி வைத்திருந்த நபர்  கிளிநொச்சியில் கைது!

Wednesday, March 30th, 2016

மறவன்புலவு பகுதியில் தற்கொலை அங்கி மற்றும் கிளைமோர் குண்டுகளை வைத்திருந்த குற்றச்சாட்டில் தேடப்பட்டு வந்த நபர் கிளிநொச்சி, அக்கராயன் பகுதியில் வைத்து இன்று மதியம் 12 மணியளவில் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது..

மறவன்புலவு பகுதியில் தற்கொலை அங்கி, கிளைமோர் உள்ளிட்ட அபாயகரமான வெடிபொருட்களை மறைத்து வைத்திருந்த நிலையில் பொலிஸாரினால் குறித்த வெடி பொருட்கள் மீட்டிருந்தனர்.

இந்நிலையில் குறித்த வெடிபொருட்களை வைத்திருந்த சந்தேகநபர் பொலிஸாரினால் தேடப்பட்டு வந்த நிலையில் கிளிநொச்சி, அக்கராயன் பகுதியில் வைத்து குறித்த நபரை கைது செய்துள்ளனர்.

Related posts: