மறவன்புலோவில் தற்கொலை அங்கி மீட்பு!

சாவகச்சேரி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட A32 பாதையில் உள்ள மறவன்புலோ பிரதேச வீடொன்றிலிருந்து தற்கொலை அங்கி மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர் அத்துடன் கைக்குண்டுகளும் மீட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த வீட்டில் கஞ்சா உட்பட்ட பல போதைப் பொருட்கள் இருப்பதாக பொலிஸாருக்கு கிடைத்த தகவலுக்கு அமைய அங்கு சோதனை நடவடிக்கைக்கு சாவகச்சேரி பொலிஸார் சென்றபோதே மேற்படி வெடி பொருட்களை பொலிஸார் மீட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.
மேலும் அந்த வீட்டில் இருந்த சந்தேக நபர் பிரதேசத்திலிருந்து தப்பிச் சென்றுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.மேலும் தப்பிச் சென்ற குறித்த சந்தேகநபரை பொலிஸார் தேடி வருவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
Related posts:
சுபீட்சம் நிறைந்த வாழ்வியலை கட்டியெழுப்பும் திருநாளாக அமையட்டும் - ஈ.பி.டி.பியின் யாழ் மாவட்ட நிர்வா...
வடக்கில் மேலும் 30 வயதுக்கு மேற்பட்ட 2 இலட்சம் பேருக்கு தடுப்பூசி வழங்கவேண்டியுள்ளது – வடக்கு மாகாண ...
ஆகஸ்ட் 12 வரை 146 நாடாளுமன்ற உறுப்பினர்கள் மட்டுமே கொரோனா தடுப்பூசி பெற்றுக்கொண்டுள்ளனர் - தகவல் அறி...
|
|