மருந்தை அதிக விலைக்கு விற்ற நிறுவனத்திற்கு சட்ட நடவடிக்கை!

புற்றுநோய்க்காக வழங்கும் மருந்தை நோயாளிக்கு அதிக விலையில் விற்ற தனியார் மருந்தகம் ஒன்று தொடர்பில் விரைவில் விசாரணைகளை ஆரம்பிக்குமாறு சுகாதார அமைச்சர் ராஜித்த சேனாரத்ன பணிப்புரை விடுத்துள்ளார்.
ஒரு இலட்சத்து 25 ஆயிரம் ரூபாவுக்கு குறித்த மருந்தை இறக்குமதி செய்துள்ள அந்த நிறுவனம், அதனை நோயாளிக்கு 4 இலட்சத்து 29 ஆயிரம் ரூபாவுக்கு விற்றுள்ளதாக தெரியவந்துள்ளது. நோயாளி ஒருவரிடம் இருந்து கிடைக்கப் பெற்ற முறைப்பாட்டை கவனத்திற் கொண்டு இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அமைச்சு தெரிவித்துள்ளது.
Related posts:
வவுனியா வளாகத்தில் மாணவர்கள் முறுகல்!
மதுபான கடைகள் மூடப்பட்டிருக்கும்!
ஜனநாயகம் குறித்து இலங்கைக்கு எவரும் கற்பிக்க வேண்டிய அவசியம் கிடையாது - வெளிவிவகார அமைச்சின் செயலாளர...
|
|